ஆப்பிள் நிறுவனம் ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும்.
இந்த நிறுவனமானது 1976 ஆம் வருடம் ஏப்ரல் முதலாம் நாள் குபெர்டினோ, கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.
கணினி மட்டுமின்றி ஐப்பாடு, ஐஃபோன் போன்ற நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் மற்றும் மாக் ஓ.எசு பணிசெயல் முறைமை, ஃபைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைஃப் போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது இந்த நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாவும் (CEO), தவிசாளராகவும் ஸ்டீவ் ஜாப்ஸ் விளங்கினார்.
ஆப்பிள் என்ற பெயரிடக் காரணம்
ஸ்டீவ் ஜாப்ஸ் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது, தனது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
அவருடைய சந்தோஷம், துக்கம் அனைத்தையும் அந்தத் தோட்டம் பார்த்திருக்கிறது.
பிரென்னன் என்ற பெண்ணுடன் இவருக்குக் கல்லூரியில் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் காதலிக்கும் இடமும் இந்தத் தோட்டம் தான்.
அந்த வசந்த காலத்தை நினைவு கூறும் விதமாக, தனது நிறுவனத்திற்கு “ஆப்பிள்’ என பெயர் சூட்டினார் என்று கூறப்படுகிறது.
நிறுவனம் ஆரம்பித்த பின்னரும், அந்தத் தோட்டத்திற்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் ஜாப்ஸ் என தெரிவிக்கப்படுகிறது.
ஐ-போன்
ஐ-போன் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் நுண்ணறி பேசி வரிசைகள் ஆகும்.
இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் நகர்பேசி இயங்குதளத்தால் செயல்படுகிறது. இந்த நகர்பேசி தொடுதிரைத் தொழில்நுட்பம் கொண்டது.
முதல் தலைமுறை ஐபோன் ஜூன் 29, 2007 அன்று வெளியிடப்பட்டது.