அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நொக்கியா ஆன்ரோய்ட் கையடக்க தொலைபேசி இந்த வாரம் வெளியாகவுள்ளது.
Nokia X5 என்ற பெயரில் இந்த கையடக்க தொலைபேசி அறிமுகமாகவுள்ளது.
அதற்கமைய Nokia X5 கையடக்க தொலைபேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்து.
1520 x 720 Pixel Resolution கொண்ட HD+ டச் ஸ்க்ரீன் வசதியினை இந்த கையடக்க தொலைபேசி கொண்டுள்ளது.
2GHz Octa Core Helio P23 Processor வசதியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதில் 4GB மெமரி அல்லது 6GB RAM பொருத்தப்பட்டுள்ளது. 32GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியையும் இந்த கையடக்க தொலைபேசி கொண்டுள்ளது.
Android 8.1 Oreo Platformஇல் இந்த கையடக்க தொலைபேசி இயங்கும் என கூறப்படுகின்றது.
மேலும் நீடித்து உழைக்கும் 3,000mAh பெட்டரியும் இந்த கையடக்க தொலைபேசியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 13 மெகாபிக்சல்கள் கொண்ட பிரதான கமரா, 8 மெகாபிக்சல்கள் கொண்ட செல்பி கமரா வசதியையும் இந்த கையடக்க தொலைபேசி கொண்டுள்ளது.