பெண்ணிற்கு கிடைத்துள்ள அதிசயமிகு பரிசு குழந்தை பெற்றேடுத்தல் ஆகும்.
பெரும்பாலான தம்பதிகள் காத்திருக்கும் நல் விஷயம் முதல் குழந்தைகான எதிர்பார்ப்பு மற்றும் அதைப் பற்றிய பல்வேறுபட்ட திட்டங்கள் ஆகும்.
இதற்காக அவர்கள் தமது வாழ்க்கை முறை மாற்றி அமைத்து கொள்கின்றனர்.
இருந்த போதிலும் அவர்களுக்கு கர்ப்பம் தரித்திருத்தலுக்குரிய முதல் அடையாளங்களும் அறிகுறிகளும் கிடைக்க பெறுவதில்லை. அதற்கு காரணம் அவர்கள் அதனைப் பற்றிய விழிப்புணர்வு இன்மையே ஆகும்.
கருத்தரித்தனை உறுதி செய்ய சோதனை கிட் ஐ பயன்படுத்தி முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
முற்கால கருத்தரித்தலுக்குரிய அடையாளங்களும் அறிகுறிகளும் என்பன பற்றி பார்ப்போமா??
• உட்பதித்தலுக்கான குருதிப் போக்கு மற்றும் சுளுக்கு பிடித்தல். கருத்தரித்தலுக்கான முதல் அடையாளம் இக் குருதிப் போக்கு ஆகும். இதனை தவறாக மாதவிடாய் உரிய குருதி வெளியேற்றமாக கருதுவர் சில பெண்கள் வயிற்றில் சுளுக்கு பிடித்திருப்பாதாக உணர்வர்.
• களைப்பு அசாதாரணமான களைப்பு மற்றும் சோர்வு என்பன வேறு ஆரம்பகால அறிகுறிகள் ஆகும். இதற்கு புரெயேஸ்ரரோன் ஓமோன் பங்களிப்பு செய்யும். இதன் சடுதியான அதிகரிப்பு பெண்களிற்கு அதிக தூக்கத்தை ஏற்படுத்தும். சோர்வுத் தன்மை குளுக்கோஸ் மட்ட குறைவினாலும் குருதி அமுக்க குறைவினாலும் மேலும் அதிகரிக்கும்.
• காலை வருத்தம் கருத்தரித்தலுடன் தொடர்பான பொதுவான அறிகுறி ஆகும். இதன் போது வாந்தியேடுத்தல் மற்றும் குமட்டல் இணைந்து காணப்படும். இந் நிலைமை 5 ‘வது வாரத்தில் இருந்து 12ம் வாரம் வரை நீடித்து இருக்கும்.
• மாதவிடாய் தவறுதல்
சீரான மாதவிடாய் சக்கரம் கொண்ட பெண்களிற்கு பொருத்தமான அறிகுறியாகும். HCG ஓமோன் அதிகரிப்பு சூலகத்தில் இருந்து முதிர்ச்சி அடைந்த முட்டை வெளியேறுவதை தடுக்கும்.
• மார்பகங்களில் ஏற்படும் மாற்றம் கருத்தரித்த காலத்திலேயே மார்பகத்தின் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அவை ஓமோன்களின் தொழிற்பாட்டால் 4 வது – 6 வது வாரங்களில் மென்மையாவதுடன் அளவிலும் பெரிதாகிறது. அதன் பின்னர் எரியோலா ஆனது அளவில் வளர்ச்சியும் நிற அதிகரிப்பு ஏற்பட்டிருத்தல் மற்றும் சிலர் கூச்ச உணர்வையும் உணர்வர்.
• உணவுகளில் வெறுப்பும் மணத்திற்கு அதிக உணர்ச்சியும் முதல் மும் மாதங்களில் உணவுகளில் வெறுப்பு ஏற்படல் பொதுவானது ஆகும். இந் நிலைமை குமட்டல் மற்றும் வாந்தியேடுத்தலினை தூண்டும்.
• அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் அதனை கட்டுப்படுத்த முடியாமை கருத்தரித்த நிலையில் உடலில் குருதியினளவு அதிகரிப்பதன் காரணமாக சிறுநீரகத்தின் தொழிற்பாடு வழமையை விட அதிகரிக்கப்படுகிறது.
• மலச்சிக்கல் கர்ப்பகாலத்தில் ஓமோன்களில் ஏற்படும் மாற்றங்களினால் சமிபாட்டுத்தொகுதி மெதுவாக தொழிற்பாடுகிறது. இந் நிலைமை மலச்சிக்கலுக்கு இட்டுச் செல்லுகிறது. இதன் போது, சிலர் வயிற்றுப் பகுதியில் வீக்க நிலையை எதிர்நோக்குவர்.
• வேறு கருத்தரித்தலுடன் சாத்தியமான அடையாளங்கள் தலைவலி, முதுகு வலி, மயக்கம் மற்றும் தலைசுற்றல்
நீங்கள், இவ்வாறான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் என்பவற்றை மாத்திரம் கொண்டு கருத்தரித்தனை உறுதி செய்யக் கூடாது.
கருத்தரித்தலுக்கான சோதனை முறையாக வீட்டிலோ கிளினிக்இலோ உறுதி செய்ய வேண்டும். .