இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3.14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, உலகளவில் கொரோனா தொற்று ஒருநாள் பாதிப்பில் இந்தியா அமெரிக்காவை மிஞ்சி உள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை, உருமாறிய கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3.14 லட்சம் பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.
இது உலகளவில் ஒரே நாளில் அதிகபட்சமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையாக பதிவாகி உள்ளது. இதற்கு முன்பு, அமெரிக்காவில் கடந்த ஜனவரி 8ம் திகதி, ஒருநாள் பாதிப்பு 3.7 லட்சம் என பதிவாகியிருந்தது.
இதன் மூலம், உலகளவில் கொரோனா தொற்று ஒருநாள் பாதிப்பில், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது.
கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டு 22 லட்சத்து 91 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,104 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
இதனால், மொத்தம் மரணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 84,657 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 13 கோடியே 23 லட்சத்து 30,644 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.