ஜம்மு விமானப்படை நிலையத்தின் உயர் பாதுகாப்பு தொழில்நுட்ப பகுதியை ஐந்து நிமிட இடைவெளியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இரண்டு வெடிப்புகள் உலுக்கியுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் எந்தவொரு உயிர் சேதமோ அல்லது காயங்களோ சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகாலை 1.37 மணியளவில் நடந்த முதல் குண்டுவெடிப்பு விமான நிலையத்தின் தொழில்நுட்ப பகுதியில் ஒரு கட்டிடத்தின் கூரையை தகர்த்தெறிந்தது.
இரண்டாவது குண்டு வெடிப்பு 1:42 மணியளவில் திறந்த பகுதியில் இடம்பெற்றது. வெடிப்பின் பின்னர் குறித்த பகுதி சில நிமிடங்களில் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது.
இரண்டு வெடிப்புகளுக்கான காரணத்தை அறிய பொலிஸ் மற்றும் தடயவியல் குழுக்கள் அந்த இடத்தை முற்றுகையிட்டன.
குண்டுவெடிப்பைத் தூண்டுவதற்காக விமான நிலையத்தின் உயர் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ட்ரோன் பயன்படுத்தப்பட்டதாக என்பது குறித்தும் தீவர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.