மதுரை மாவட்டத்தில் உள்ள பகுதியை சேர்ந்த மணிகண்டன் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பீபா என்ற மனைவியும் விஜயராமன் மற்றும் விஜயதசமி என்ற இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.
எனவே அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி ஷீலாவிடம் அவர் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவம் நடந்த நாள் அன்றும் போதையில் இறைச்சி வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து சமைக்கச் சொல்லி விட்டு அவருடன் தகராறு செய்துள்ளார் மணிகண்டன். இந்த தகராறு எல்லை மீறி போகவும் மிகுந்த ஆத்திரத்தில் ஷீலா அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து மணிகண்டன் தலையில் போட்டு இருக்கிறார்.
இதனால் சம்பவ இடத்திலேயே தலை சிதறி மணிகண்டன் உயிரிழந்துள்ளார். பின்னர் ஷீலாவை காவல்துறையினருக்கு போன் செய்து இதுகுறித்து தகவலளித்துள்ளார். உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் மணிகண்டன் உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் மணிகண்டனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. கணவனை கொலை செய்து விட்டு தானே போலீசுக்கு தகவல் கொடுத்த பெண்மணியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.