- வாரத்தில் இரண்டு முறையேனும் கீரை சேர்த்துக் கொள்வது நல்லது.
- இதனை சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பாலக்கீரை – 2 கப்
முட்டை -2-3
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
கறிவேப்பில்லை – 1 கொத்து
பச்சைமிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 – 3/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, மஞ்சள் தூள், கீரைக்குத் தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.
கீரை 5 நிமிடங்கள் வதங்கினால் போதுமானது. கீரை வதங்கியவுடன் கலக்கி வைத்துள்ள முட்டை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மற்றும் முட்டைக்குத் தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும்.
முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் உதிரியாக வரும் வரை வதக்கினால் பாலக் முட்டை புர்ஜி தயார்.