சியோமி நிறுவனம் தனது புதிய 12S அல்ட்ரா கான்செப்ட் எடிஷன் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
புதிய 12S அல்ட்ரா கான்செப்ட் எடிஷன் சியோமி நிறுவனத்தின் புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.
சியோமி நிறுவனம் பிரத்யேக டிசைன் கொண்ட புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. புது பிளாக்ஷிப் மாடல்களில் பிரீமியம் கேமரா அனுபவம், பிழை இல்லா செயல்திறன் என அசத்தலான வசதிகளை வழங்க சியோமி முடிவு செய்துள்ளது. இந்த வரிசையில் சியோமி 12S அல்ட்ரா கான்செப்ட் எடிஷனுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கூடுதலாக பொருத்திக் கொள்ளும் வசதி கொண்ட லெய்கா லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய சியோமி பிளாக்ஷிப் மாடல் சாம்சங், ஆப்பிள், விவோ, ஒன்பிளஸ் என கேமரா அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமையும். சியோமி சீனா தனது வெய்போ மூலம் புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் வீடியோ, புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது. டீசர்களின் படி புது ஸ்மார்ட்போன் 1 இன்ச் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது.
முழுமையான லெய்கா லென்ஸ் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை சியோமி 12S அல்ட்ரா கான்செப்ட் எடிஷன் பெற இருக்கிறது. இது புது ஸ்மார்ட்போனின் கேமரா திறனை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும். புதிய சியோமி 12S அல்ட்ரா கான்செப்ட் எடிஷன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி அலுவல்பூர்வ புகைப்பட சாதனமாகவும் செயல்படும் என எதிர்பார்க்கலாம்.
புதிய சியோமி 12S அல்ட்ரா கான்செப்ட் எடிஷன் மாடலில் இரண்டு 1-இன்ச் கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் தெரிவித்து இருக்கிறார். இவற்றில் ஒரு லென்ஸ் செவ்வக சென்சார் ஆகும். மற்றொன்றில் வெளிப்புற லென்ஸ் ஒன்றை இணைத்துக் கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. கூடுதல் லென்ஸ்-ஐ எளிதில் பொருத்தவும், கழற்றிக் கொள்ள ஏதுவாக அதனை நடுவில் பொருத்தி இருக்கிறது.
சியோமி 12S அல்ட்ரா கான்செப்ட் எடிஷனில் அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்படுகிறது. எனினும், இதில் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்படும் கூடுதல் லென்ஸ் ஜூமிங் வசதியை வழங்கப்படும் என தெரிகிறது.