ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இன்று கிங்ஸ்பரி ஹோட்டலில் சிறப்பான இரவு விருந்தளிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரவு-செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்டதும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தூதுவர்களுக்கும் அளிக்கப்படும் பாரம்பரிய தேநீர் விருந்தை நடத்த மாட்டோம் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும் பிரபலமான ஹோட்டல்களில் விஸ்கி, பிரெண்டி போன்ற உயர்தர சாராயத்துடன் இரவு விருந்து நடத்த பணம் எங்கே என எதிர்கட்சி கேள்வி எழுப்பவுள்ளது.
அதற்கமைய, இந்த விருந்திற்கு அரசாங்கத்தினால் பணம் வழங்கப்படுகின்றதா என எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.