கடந்த மாதம் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவர்களை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பலாங்கொடையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 25 வயதுடைய தெஹிவளை, மொரட்டுவ, அம்பலாங்கொடை மற்றும் வெலிமடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக விடுதிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, மாணவர்களை தாக்கி காயப்படுத்தியதாகவும், சட்டவிரோதமான ஒன்றுகூடல் ஒன்றின் அங்கமாக இருந்ததாகவும் குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் நேற்று(வியாழக்கிழமை) பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.