இரண்டு பிரதான கட்சிகளினதும் மற்றும் ஏனைய கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் அரசியல் தீர்வை வழங்கும் சாத்தியம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் சமாதானம் ஏற்படும் என மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், அந்த எண்ணம் ஈடேறவில்லை. அதனால், 2015 ஆம் ஆண்டில் மக்கள் இரண்டு பிரதான கட்சிகளிடமும் இந்த சவாலை ஒப்படைத்ததாக பிரதமர் கூறியுள்ளார்.
இனவாதத்தையும் மத பேதங்களையும் ஏற்படுத்த சில சக்திகள் முயற்சித்தாலும் அது வெற்றியளிக்கவில்லை.
இனங்களையும் மதங்களையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை ஒரேயடியாக நிறைவுக்கு கொண்டு வர முடியாhது. நாட்டை முன்னேற்ற கிடைத்த இந்த இறுதி சந்தர்ப்பத்தின் மூலம் பயனடைந்து கொள்ள வேண்டும்.
நாட்டின் பெரும்பாலான மக்களினதும் உலக நாடுகளினதும் முழுமையான ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது.
அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தொடர்பில் இரண்டு பிரதான கட்சிகளும் 2015 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.