- பாதாம் பேஸ் பேக் கோடைக்காலத்தில் பயன்படுத்த ஏற்றது.
- சருமம் பொலிவுடனும், இளமை தோற்றத்துடனும் மிளிரும்.
இந்த பாதாம் ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, முகம் பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும். பாதாம் விலை அதிகமானது தான். இருப்பினும், இதைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், எதிர்பார்த்த அழகைப் பெறலாம்.
பாதாம் பருப்பை நிறைய பேர் ஊறவைத்து சாப்பிடுகிறார்கள். ஊறவைத்த பாதாம் ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பது போல அதன் தோலும் சரும பராமரிப்புக்கு பயன்படக்கூடியது. பாதாம் தோலை கொண்டு இறந்த சரும செல்களை உரித்தெடுக்கலாம். 10 பாதாம் தோலுடன் மூன்று டீஸ்பூன் பால் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
அதனுடன் சிறிதளவு தண்ணீரும் சேர்த்துக்கொள்ளலாம். சருமத்தின் தன்மையை பொறுத்து தயிரும் கலந்து கொள்ளலாம். இந்த பேஸ்டை முகம் மற்றும் கைகளில் தடவி மசாஜ் செய்யவும். அது சருமத்தில் படர்ந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதுடன், சருமத்தை சுத்தப்படுத்தவும் உதவும். இந்த மாஸ்க்கை தினமும் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
பாதாம் தோல் வயதான அறிகுறிகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் தன்மையும் கொண்டது. சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. 10 பாதாம் தோலுடன் 2 டீஸ்பூன் பால், சிறிதளவு மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் கலந்து சருமத்தில் பூசலாம். அதனுடன் தேனும் சேர்த்துக்கொள்ளலாம். அது உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவி விடலாம். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் சருமம் பொலிவுடனும், இளமை தோற்றத்துடனும் மிளிரும்.
பாதாம் பேஸ் பேக் கோடைக்காலத்தில் பயன்படுத்த ஏற்றது. இந்த மாஸ்க்கை கோடையில் தினமும் பயன்படுத்தி வந்தால், சருமம் கருமையாவதைத் தடுப்பதோடு, பருக்களின் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். மேலும் வெளியே வெயிலில் சுற்றுவதால், சருமத்தில் இறந்த செல்களின் அளவும் அதிகரித்து, சருமம் பொலிவிழந்து காணப்படுவது தடுக்கப்படும்.