இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)-ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோர் மோதுகிறார்கள். 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ள ஜோகோ விச் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது.
இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)-ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோர் மோதுகிறார்கள். 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ள ஜோகோ விச் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளார்.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நடப்பு சாம்பியனான அவர் விம்பிள்டன் டென்னிசில் 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார். இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு அரை இறுதியில் நம்பர் ஒன் வீரர் கார்லஸ் அல்காரெஸ் (ஸ்பெயின்)-மெட்வடேவ் (ரஷியா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் வோன்ட் ரோசோவா (செக்குடியரசு)-ஜாபியர் (துனிசியா) ஆகியோர் மோதுகிறார்கள்.