நம் அனைவருடைய வீட்டிலும் விளக்கேற்றி, தெய்வத்தை வழிபடுவது ஒரு கலாச்சார பண்பாடாகும்.
அப்படி இருக்கும் நமது பாரம்பரிய கலாச்சாரத்தில் நாம் செய்யும் ஒருசில செயல்களை திருத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
வீட்டில் விளக்கேற்ற சிறந்த நேரம் எது?
காலை 3 மணி முதல் 5 மணிக்குள் வீட்டில் விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபடுவது சிறந்த நேரமாகும். இதனால் நமக்கு சர்வமங்கள யோகம் கிடைக்கும்.
வீட்டில் மாலை 6 மணி அளவில் விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபடுவதால், நல்ல வேலை, கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும்.
காலையில் நமது வீட்டில் விளக்கு ஏற்றும் போது, நம்முடைய உடல் மற்றும் மனம் சுத்தத்துடன், வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்ட பின விளக்கேற்ற வேண்டும்.
வீட்டில் காலை மற்றும் மாலையில் விளக்கேற்றி, தெய்வத்தை வழிபடும் போது, நமது வீட்டின் கொல்லைப் புறக் கதவைச் மூடிவிட வேண்டும்.
வீட்டில் விளக்கேற்றும் போது, அந்த விளக்கிற்கு பால், கற்கண்டு வைத்து வழிபட்டால், அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் செய்யக் கூடாத செயல்கள் என்ன?
வீட்டில் விளக்கு ஏற்றிய பின் தலை சீவக் கூடாது. வீட்டின் குப்பையை பெருக்கக் கூடாது.
சுமங்கலிப் பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது.
விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.
விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக் கூடாது.
விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது.
விளக்கேற்றியவுடன் சாப்பிடக் கூடாது.
விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவற்றைக் கொடுக்கக் கூடாது.