வள்ளத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற சுந்தரலிங்கம் கிருஸ்ணராசா (வயது 34) என்ற குடும்பஸ்தர் நீரிழ் முழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ். காரைநகர் – ஊரி கடற்கரையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
ஒரு பிள்ளையின் தந்தையான இவர் வியாழக்கிழமை அதிகாலை 5.30 அளவில் ஊரி கடலிற்கு வள்ளத்தில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
இந்தநிலையில், 10.00 மணி ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை என மனைவி மற்றும் உறவினர்கள் தேடிச் சென்ற போது, நீரிழ் மூழ்கியவாறு மயக்கமுற்ற நிலையில் கிடந்த அவரை, மீட்டு உடனடியாக காரைநகர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையியே சுந்தரலிங்கம் கிருஸ்ணராசா உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
குறித்த கடற்பரப்பில் சுழி அதிகமாக இருப்பதாகவும், அத்துடன், யுத்தகாலத்தின் போது இடம்பெற்ற ஷெல் வீச்சுக்களினால் ஏற்பட்ட குழிகள் பாரிய அளவில் இருப்பதாகவும், பலருக்கு அவ்வாறு குழிகள் இருப்பது தெரிவதில்லை இதனால் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுகின்றன என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.