கடந்த இரண்டு வருடங்களில் உத்தேச இலக்கை அடையாத 38 அமைச்சுக்கள் இருப்பதாக அரசாங்கத்தின் ஆலோசகர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு வழங்கியுள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் சில அமைச்சுக்கள் தேசிய மட்டத்திலான அமைச்சுக்கள் என்பது முக்கியமான அம்சம்.
இந்த அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி கூட செலவிடப்படவில்லை என கூறப்படுகிறது.
அமைச்சுக்களின் செயலாளர்களது வினைதிறனற்ற செயற்பாடுகளே இந்த நிலைமைக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் மற்றும் வியட்நாம் நாடுகளுக்கான விஜயத்தை முடித்து கொண்டு நாடு திரும்பியதும் அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் செயலாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து விளக்கம் கோரவுள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.