கனடாவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
கனேடிய மக்கள் புதிய ஆண்டை வரவேற்கத் தயாராகிய சந்தர்ப்பத்தில் ஒன்டாரியோ பகுதியில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
3.1 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய நேரப்படி நேற்று மாலை 5.35 மணியளவில் ஒன்டாரியோவின் தென்கிழக்கு பகுதியில் 2.5 மைல் தூரத்தில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக அமெரிக்கக புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாத போதிலும் இந்த நில அதிர்வால் பலர் அதிர்ச்சியடைந்துள்ளதாக சமூக வளைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
கடந்த வருடம் நில அதிர்வுடன் நிறைவு பெற்றுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.