இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை தானும் தனது சகோதரி பிரியங்காவும் மன்னித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஹூல் காந்தி தெரிவித்துள்ளார்.
நேற்று சிங்கப்பூரில் பழைய மாணவர்களுடனான சந்திப்பொன்றின் போதே அவர் இந்த கருத்தினை வெளிப்படுத்தினார்.
பல வருடங்களாக தமது தந்தையின் கொலையுடன் தொடர்புடையவர்கள் குறித்து கடுமையான சீற்றத்துடன் இருந்ததாக தெரிவித்த அவர், ஆனால் காலப்போக்கில் தற்போது முற்றாக மன்னிக்கும் தன்மையை தாம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலத்தை தொலைக்காட்சியின் மூலம் தாம் பார்த்த போது இரண்டு உணர்வுகள் தம் மனதில் தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
முதலாவதாக ஏன் இவர்கள் இப்படி மனிதாபிமானமற்ற வகையில் நடந்து கொள்கின்றனர் என தோற்றியதாகவும், இரண்டாவதாக பிரபாகரன் குறித்து தாம் வருந்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, அவர் மற்றும் அவரது பிள்ளைகள் குறித்து வேதனைப்பட்டதாகவும் ராஹூல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
தெற்காசிய நாடுகளுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளை ராஹூல் காந்தி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்