பேஸ்புக் நிறுவனம் 9 கோடி வாடிக்கையாளர்களின் தகவலை திருடியதை ஒப்புதல் கொண்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் தேர்தல் பிரச்சாரத்துக்காக, இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிஜ் அனாலிட்டிகா நிறுவனம், பேஸ்புக் நிறுவனத்தின் 5 கோடி வாடிக்கையாளாரின் தகவலை திரட்டி, தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராகவும் சர்வதேச அளவில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இதனால் விளக்கம் அளிக்கும்படி பேஸ்புக் நிறுவனத்திற்கு அமெரிக்கா மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் பேஸ்புக் நிறுவன உரிமையாளர் மார்க் வரும் 11 ஆம் திகதி ஆஜராகி விளக்கம் கொடுக்கவுள்ளார். இந்நிலையில் அமெரிக்கா தொடர்பான 9 கோடி பேரின் தகவல்கள், இங்கிலாந்து நிறுவனத்திற்கு பகிரப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவன தொழிற்பிரிவு அதிகாரி மைக் ஷ்ரோப்பெர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது