கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 437 வீடுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரது தலைமையில் பயனாளிகளிடம் இன்று கையளிக்கப்படவுள்ளன.
பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் வீட்டுக்கு பதிலாக வாழ்க்கை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு நகரில் வாழும் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கொழும்பு நகரில் பல இடங்களிலும் தோட்டங்கள் என்று அழைக்கப்படும் குடியிருப்புக்களில் வாழ்ந்த 50 ஆயிரம் இல்லக் கூறுகளுக்கு நவீன வசதிகளைக் கொண்ட வீடுகளை வழங்கி, அடுக்கு மாடி தொகுதிகளில் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்கின்றது. இதற்கான திட்டத்திற்காக அரசாங்கம் சமார் 750 கோடி ரூபாவை முதலீடு செய்கின்றது. இதன் கீழ் தெமட்டகொட ஆராமய பகுதியில் குடியிருப்பு மனைத் தொகுதி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு சியபத்த செவன என்று பெயரிடப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நலன்கருதி 2020ஆம் ஆண்டிற்குள் ஒன்பதாயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளை அமைப்பதற்கான திட்டம் அமுலாகின்றமை குறிப்பிடத்தக்கது.