Loading...
வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மேலும் 33 ஏக்கர் காணி மக்களிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.
பளை வீமன்காமம் வடக்கு J/ 236 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணி இன்று மக்கள் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்படவுள்ளது.
Loading...
வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை வீதி கடற்கரையோரம் வரை தற்பொழுது பெரும்பாலான பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை J/233 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மாம்பிராய், மாங்கொல்லை பகுதிகளைச் சேர்ந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 36 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...