Loading...
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே, பொதுநிகழ்ச்சி ஒன்றில் பெண்ணொருவருக்கு முத்தமிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே, அங்கே தென்கொரியா வாழ் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
Loading...
அப்போது, தம்மிடம் முத்தம் வாங்கும் பெண்ணுக்கு, தாம் இலவசமாக புத்தகம் தருவதாக, ரோட்ரிகோ கூறினார். இதையடுத்து, மேடைக்கு வந்த பெண்ணின் நீண்ட கூச்சத்துக்குப் பிறகு, அவரது உதட்டில் ரோட்ரிகோ முத்தமிட்டார்.
இந்த சம்பவம், தென்கொரியா மட்டுமின்றி, பிலிப்பைன்ஸிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Loading...