பௌத்த ஆலோசனை சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பங்குபற்றுதலுடன் ஒன்றுகூடியது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில் பௌத்த சாசனத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க பொலன்னறுவை சொலஸ்மஸ்தானாதிபதி சியம் மகா நிக்காயவின் அஸ்கிரி மகா விகாரை பிரிவின் அனுநாயக்க வண. வெடறுவே உபாலி நாயக்க தேரர், அஸ்கிரி மகா விகாரை பிரிவின் அநுராதபுர பிக்குகள் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வண. ஆனமடுவே தம்மதஸ்சி அனுநாயக்க தேரர், சாஸ்திரபதி ராஜகீய பண்டித மாஹல்லே தர்ம கீர்த்தி ஸ்ரீ சுமங்கல விபுலதிஸ்ஸஹிதான சங்க நாயக்க தேரர் மற்றும் வண. நாரம்பனாவே ஆனந்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன், புத்த சாசன அமைச்சின் செயலாளர் சந்ரபேம கமகே உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.