2018 , 2019ஆம் ஆண்டிற்கான SLT வருடாந்தம் வெளியிடும் மேல் மாகாண வர்த்தக தொலைபேசி விபரக்கொத்தின் முதலாவது பிரதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேனவினால் அப்பிரதி ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது. SLT rainbow pages நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி மல்ராஜ் வலப்பிட்டியவும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார்.
SLT rainbow pages தொலைபேசி விபரக்கொத்தில் அரசாங்க தகவல்கள், சமய நிறுவனங்களின் தகவல்கள் சுமார் 1300 பேர்களின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளதுடன், அச்சிடப்பட்டுள்ள விபரக் கொத்துக்கு மேலதிகமாக rainbowpages.lk இணையத்தளம், கைத்தொலைபேசி, மென்பொருள் இருவட்டு போன்ற பல்வேறு நவீன தொழில்நுட்ப முறைமைகளின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.