பிரதி சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வி எனக்கு ஏற்பட்ட தோல்வியல்ல என்று ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் திருமதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது.
இதன் போது ஜக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி தெரிவுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் சபையில் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே உரையாற்றினார்.
அவர் குறிப்பிடுகையில்,
இந்த தோல்வி எனக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல . அது பெண்களுக்கு ஏற்பட்ட தோல்வி .
தனது பெயரை முன்மொழிந்த எஸ்.பி.திசாநாயக்க மற்றும் ஆதரவு வழங்கி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.
இதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்,
இலங்கை அரசியல் வரலாற்றில் செனட் சபையாக இருந்தபோது முதலாவது பெண் பிரதி சபாநாயகர் ஒருவர் இருந்துள்ளார். பெண் ஒருவர் அடுத்த சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றார்.
தமது ஆட்சியிலேயே அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.