Loading...
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத் திட்டம் நடைபெற்றது.
சமூக சேவை உத்தியோகத்தர் பி.திருச்செல்வம் தலைமையில் நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில் இதன்போது மது மற்றும் போதைப்பொருட் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலான ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன், பிரசுரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டது.
Loading...
இந்த நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராஜா மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Loading...