ஸ்ரீலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினர் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் வடமாகாண சபை முதலமைச்சர் மற்றும் யாழ் மாநகர சபை முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டதற்கு கடும்கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபையின்ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் பொது நிகழ்வுகளிலும், சிவில் நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர்ஈடுபடக்கூடாது என அண்மையில் யாழ் மாநகர சபையில் தீர்மானமொன்றுஎடுக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டும் அந்த சபையின் உறுப்பினர் ஒருவர், இவ்வாறான நிலையில் மாநகர சபை முதல்வர் கலந்துகொண்டதன் மூலம் குறித்ததீர்மானத்தால் என்ன பயன் என்றும் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா இராணுவம்உள்ளிட்ட அரச படையினரின் முழுமையான அணுசரணையுடன் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் தலைமையில் மர நடுகை செயற்திட்டமொன்றுமுன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியிலுள்ள கோட்டையை அண்மித்தபகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.விவிக்னேஸ்வரன் உட்பட வட மாகாண சபை உறுப்பினர்களும்,யாழ் மாநகர சபை முதல்வர் எமானுவெல் ஆர்னோல்ட் உட்பட மாநகர சபை உறுப்பினர்களும்கலந்துகொண்டிருந்தனர்.
யாழ் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில்நடைபெறும் சிவில் நடவடிக்கைகளிலும் பொது நிகழ்வுகளிலும் இராணுவம் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கும் தீர்மானமொன்று யாழ் மாநகர சபையில் நிவேற்றப்பட்டிருக்கும் பட்சத்தில்இராணுவம் கலந்துகொண்ட நிகழ்வில் மாநகர சபை முதல்வரும் உறுப்பினர்களும்கலந்துகொண்டதற்கு யாழ்.மாநகரசபை உறுப்பினர் ந.லோகதயான் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
யாழ் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில்நடைபெறும் சிவில் நடவடிக்கைகளிலும் பொது நிகழ்வுகளிலும் இராணுவம் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கும் தீர்மானம் கடந்த மே மாதம் 29 ஆம் திகதி யாழ் மாநகர சபையில்நிறைவேற்றப்பட்டிருந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபைஉறுப்பினரான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் சமர்ப்பித்திருந்த சிவில் நடவடிக்கையில்இராணுவம் ஈடுபடுவதை தடைசெய்யும் தீர்மானம் ஏகமனதாக யாழ் மாநாகர சபையில்நிறைவேற்றப்பட்டிருந்தது.
வட மாகாணத்தில் தொடர்ச்சியாக பெரும் எண்ணிக்கையில்இராணுவம் நிலைகொண்டிருப்பதற்கும், பொது நிகழ்வுகளில் இராணுவம் கலந்துகொள்வதற்கும் கடும் எதிர்ப்பை பதிவுசெய்துவரும் வடமாகாண முதலமைச்சர்சீ.வி.விக்னேஸ்வரனும் இன்றைய தினம் இராணுவத்துடன் இணைந்து மர நடுகை நிகழ்வில் என்னஅடிப்படையில் கலந்துகொண்டார் என்றும் யாழ்.மாநகரசபை உறுப்பினர் லோகதயான் கேள்விஎழுப்பினார்.
இதேவேளை வட மாகாணத்தில்தொடரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை தடுப்பது குறித்த நேற்றைய தினம்இடம்பெற்றிருந்த கலந்துரையாடலில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்கலந்துகொண்டிருக்கவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில்இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்து நேற்றைய தினம்வடமாகாணசபை உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்றுஇடம்பெற்றிருந்தது.
எனினும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளாதுதவிர்த்துக்கொண்டிருந்த வட மாகாண முதலமைச்சர் இராணுவத்துடன் இணைந்து வட மாகாணஆளுநர் நடத்திய மரநடுகை நிகழ்வில் கலந்து கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றுயாழ்.மாநகரசபை உறுப்பினர் ந.லோகதயான் குறிப்பிட்டுள்ளார்.