பெண்கள் தைரியமாக பேச வேண்டும் என்று தான் இப்போது பலரும் சொல்லிக் கொடுக்கும் விஷயம். தன் மனதில் பட்டதை தைரியமாக சமூக வலைதளங்களில் பதிவு செய்பவர் நடிகை கஸ்தூரி. இவர் சமீபத்தில் வெளியான டீஸரை கலாய்த்து டுவிட் போட்டிருந்தார்.
அதைப் பார்த்த சில நடிகர்களின் ரசிகர்கள் டுவிட்டரில் மோசமாக கஸ்தூரியை விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் கஸ்தூரி ஒரு பேட்டியில், டுவிட்டரி நான் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். ஆண்கள் தப்பாக எது வேண்டுமானாலும் கூறலாம், ஆனால் பெண் எதுவும் கூற கூடாது. நடிகைகளில் கல்யாணம் பிறகு நடிக்க கூடாது.
இதுவே நடிகர்கள் தொடர்ந்து நடித்தால் கெத்து என்கிறார்கள். தாத்தா வயது நடிகர்கள் பேத்தி வயது நடிகர்களோடு டூயட் பாடுவதை இந்த சமூகம் மதிக்கும். இதுபோல் சில விதிமுறைகள் சமூக வலைதளங்களில் இருப்பதை தெரிந்துகொண்டேன் என்று பேசியுள்ளார்.
அவர் தாத்தா என்று யாரை குறிப்பிடுகிறார் என்பது தான் ரசிகர்களின் பெரிய கேள்வி.