Loading...
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஓட்டலின் மேற்கூரையில் இன்று (06.06.208) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 100க்கு மேற்பட்ட வீரர்கள் போராடி வருகின்றனர்.
பிரிட்டன் தலைநகரான லண்டனின் மத்தியில் அமைந்துள்ளது நைட்ஸ் பிரிட்ஜ் ஓட்டல். இந்த ஓட்டலின் மேற்கூரையில் இன்று திடீரென தீ பிடித்து எரிந்தது.
Loading...
இதில் ஏற்பட்ட புகையால் அந்த பகுதி கருமையாக காட்சியளித்தது. தகவல் அறிந்து அங்கு 20க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன.
அதில் 120க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
Loading...