2025 ஆம் ஆண்டு பால் உற்பத்தியில் தன்னிறைவை அடையக்கூடிய திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற தேசிய பால் உற்பத்தி மற்றும் பாவனை அபிவிருத்தி தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கிராம சக்தி செயற்றிட்டத்திற்கு அமைய இந்த கலந்துரையாடல் நடைபெற்ற ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 450 பாடசாலைகளிலுள்ள மாணவர்களுக்கு பால் வழங்கப்படும் செயற்றிட்டத்தை மேலும் விரிவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 17 இலட்சம் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கான பாலை வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.