Loading...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று மாலை இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கடந்த வாரம் இடம்பெற்றன. அதன் பின்னர் கூடும் முதலாவது கூட்டம் இதுவாகும்.
இந்நிலையில், இன்றைய தினம் கட்சியின் எதிர்கால திட்டங்கள், முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...