லண்டனில் பச்சிளம் குழந்தை மற்றும் அதன் தாயாரை கத்தியால் கொடூரமாக தாக்கிவிட்டு தலைமறைவான நபர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.
மேற்கு லணடனில் உள்ள Feltham பகுதியில் பச்சிளம் குழந்தை மற்றும் 32 வயது பெண்மணி என இருவர் கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில்,
தாக்குதலில் ஈடுபட்ட 25 வயது ரெஹான் கான் என்ற இளைஞரை பொலிசார் தீவிரமாக தேடி வந்தனர்.
குறித்த சம்பவத்தில் குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் அதன் தாயார் ஆபாத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
திங்களன்று இரவு சுமார் 7.12 மணியளவில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பாகிஸ்தானியரான ரெஹான் கான் புதனன்று காலை பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது