அண்மைக் காலமாக உள்துறை அமைச்சானது உயர் தகமையின் (Tier 1) கீழ் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பம் செய்தவர்களின் விண்ணப்பங்களை சில காரணங்களுக்காக நிராகரிப்பு செய்து வந்தது.
எடுத்துக்காட்டாக விண்ணப்பதாரிகள் சரியாக வரி செலுத்துவதற்கான விண்ணப்பத்தை நிரப்பவில்லை என்றாலும் அவர்களுடைய விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டிருந்தது. குடிவரவுச் சட்ட பந்தி 322 (5) கீழ் இவற்றைக் காரணம் காட்டி விண்ணப்பங்களை மறுத்திருந்தது.
ஆனால், குறித்த இந்த பத்தியின் கீழ் விண்ணப்பங்களை நிராகரிப்பதை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளதாக உள்விவகார அமைச்சர் சஜித் ஜாவித் அவர்கள், உள்துறை அமைச்சு செயற்குழுவுக்கு (The Home Affairs Committee) அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மீளாய்வு இடம்பெற்றுக்கொண்டிருப்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய தவறுகளுக்காக நிரந்தர வதிவிட உரிமைகள் மறுக்கப்படக்கூடாது என்ற அறிவுரை செய்யப்படுமாயின் உயர்தகமையின் கீழ் விண்ணப்பம் செய்தோருக்கு வரிசெலுத்துதல் தொடர்பாக சிறிய தவறுகள் இருப்பின் அவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படலாம்.