தரையில் தான் சிந்திய காபியைத் தானே சுத்தம்செய்த நெதர்லாந்து பிரதமருக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
நெதர்லாந்தில், ஜனநாயக விடுதலை மக்கள் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அதன் தலைவராக உள்ள மார்க் ரூட்டே, நெதர்லாந்து பிரதமராக உள்ளார்.
இவர், நேற்று முன்தினம் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார். அப்போது, தான் கொண்டு சென்ற காபி, எதிர்பாராத விதமாகத் தரையில் சிந்திவிட்டது. அதைப் பார்த்த பிரதமர் மார்க் ரூட்டே, உடனடியாகத் துடைப்பானை வைத்து அதைச் சுத்தம் செய்தார். அப்போது அங்கிருந்த துப்புரவுப் பணியாளர்கள், ஆரவாரம் செய்து அதை வரவேற்றனர்.
இந்த வீடியோ, தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. பிரதமர் ரூட்டேவின் இந்தச் செயலை வெகுவாகப் பாராட்டிவருவதுடன், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும்வருகின்றனர்.
இந்த செயற்பாட்டை அரசியல்வாதியும் சுத்தம் செய்ய முன்வர மாட்டார்கள். கவுன்சிலர் முதல் உயர் பதவிகளில் இருப்பவர்கள் வரை அனைத்து அரசியல்வாதிகளும் பந்தாவாக சுற்றிவருவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும். இவர்களுக்கு மத்தியில் நெதர்லாந்து பிரதமரின் செயல், பல நாட்டவர்களை கவர்ந்துள்ளது.