வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் 13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அமுல்படுத்தி, மாகாண சபையின் அனுமதியின்றி வடக்கில் காணிகளை கையகப்படுத்த தடை விதித்து யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளதாக தெற்கின் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மாகாண சபை வித்துள்ள இந்த தடையை மீறினால்,இராணுவத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நேற்று முன்தினம் (05.06.118) நடைபெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாகவும், 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைய வடக்கில் காணிகளை கையகப்படுத்த மாகாண சபையின் அனுமதி அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டள்ளது.
வடக்கு மாகாண சபையில் இந்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளதால், வடக்கில் பாதுகாப்புக்காக காணிகளை கையகப்படுத்தும் வகையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள உத்தரவு நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக அந்த சிங்கள ஊடகம் கூறியுள்ளது.