இலங்கையில் பிறந்து வெளிநாட்டில் வளர்த்த இளம் பெண்ணினால் விசேட வேலைத்திட்டம் ஒன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வறுமை காரணமாக வெளிநாட்டவர்களுக்கு பிள்ளைகளை தத்துக் கொடுத்த தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை தேடி கொள்வதற்காக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ருவன்வெல்ல தாய்க்கு பிறந்து நெதர்லாந்தில் வளர்ந்த சந்தமாலி அல்லது பன் ரோசன் என அழைக்கப்படும் பெண்ணினால் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளிலுள்ளவர்களுக்கு தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரை கண்டுபிடிப்பதற்காக இலங்கை வருகின்றனர்.
தங்கள் தாய்மார்களை கண்டுபிடிப்பதில் அவர்கள் பெரும் சிமரங்களை சந்திக்கின்றனர்.
இந்நிலையில் இலகுவில் கண்டுபிடிக்கும் வகையில் நெதர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு அறிவித்து அவர்களின் உதவியுடன் டிஎன்ஏ வங்கி ஒன்றை ஸ்தாபிப்பதே வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
கடந்த 3ஆம் திகதி ஞாயிற்று கிழமை விஹார மகா தேவி பூங்காவில் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு வழங்கிய தாய்மார்கள் இருப்பின் தனக்கு தகவல் வழங்குமாறு கையேடு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.
“நாங்கள் பிள்ளைகளை வழங்கிய தாய்மார்களின் தகவல்களை சேகரித்து நெதர்லாந்து அரசாங்கத்திற்கு வழங்குவோம். நெதர்லாந்து அரசாங்கம் எங்களுக்கு உதவும் என நாங்கள் நம்புகின்றோம் என சந்தமாலி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.