கோவில்களில் நடக்கும் அதிசயங்களைக் காண கண் கோடி வேண்டும். அந்த வகையில் இந்தக் கோயிலில் என்ன ஸ்பெஷல் என்று பார்ப்போம். எவ்வளவு எண்ணெயை ஊற்றினாலும் அதை அப்படியே தன்னுள் உறிஞ்சிக்கொள்ளும் ஒரு அதிசய சிவலிங்கத்தை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
தஞ்சை மாவட்டம் திருநீலக்குடியில் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.இந்த கோவில்1000-2000 முன் கட்டப்பட்ட இந்த பழமையான கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.
இங்குள்ள சிவன் கோவிலுக்கு செய்யப்படும் நல்லெண்ணெய் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது.
நாள் முழுக்க குடம் குடமாக எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும்,மறுநாள் பார்க்கும் போது மிகவும் வறட்சியாக காணப்படும் என்பது தான் மாபெரும் அதிசயம்.
நாள் முழுக்க பாத்திரம் பாத்திரமாக ஊற்றப்படும் எண்ணெயை சிவலிங்கம் எப்படி உறிஞ்சுகிறது? உறிஞ்சப்படும் எண்ணெய் என்ன ஆகிறது? இப்படி எந்த கேள்விகளுக்கான விடையும் இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.
சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணையை உட்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும் என்பது ஐதீகம்.