நுண்நிதி கடன் பிரச்சினையால் கிளிநொச்சியில் இது வரை 13பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் இது தொடர்பில் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நுண்நிதி கடனின் தாக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்ற நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் இதனால் பெரும் பாதிப்புக்களை நோக்கியுள்ளனர்.
இதனால் பெண்கள் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர். அத்துடன், நுண்நிதி கடன் பிரச்சினை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்த நிலையில் தற்போது நுவரெளியா, ஹம்பாந்தோட்டை போன்ற பகுதிகளிலும் நுண்நிதிகடன் பிரச்சினையினால் உயிரழப்புக்கள் சம்பவிக்கின்றன.
இதேவேளை, மஹிந்த ஆட்சி காலத்தில் உட்கட்டுமானம் என்ற பெயரில் ஒரு புறமும், வாழ்வாதாரம் என்ற வகையில் இன்னொரு புறமும் வடக்கு கிழக்கில் நிதி பாய்ச்சல்கள் இடம்பெற்றன.
இவ்வாறான நிதி பாய்ச்சல் அந்த மக்களினுடைய வாழ்க்கையில் மாற்றங்களை கொடுக்கவில்லை.
மேலும், போரின் அழிவிலிருந்து மீளத்துடிக்கும் மக்களின் வாழ்வைச் சிதைக்கும் நுண்நிதிக் கடன் நிறுவனங்களின் செயல்பாடுகள் மிக கொடூரமாக இருக்கதாக குறிப்பிட்டுள்ளார்.