அவுஸ்திரேலியாவின், மெல்போர்ன் நகரிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பத்தை விடுவிக்குமாறு கோரி நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த மார்ச் 5ஆம் திகதியன்று அதிகாலையில் அந்த இலங்கை தமிழ் குடும்பத்தின் வீட்டுக்கு சென்ற அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள், கணவன் மனைவி உட்பட இரண்டு பிள்ளைகளையும் மெல்போர்னுக்கு அழைத்து சென்றுள்ளனர்.குறித்த குடும்பத்தினர் மத்திய குயின்ஸ்லாந்து, பிலோலா பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் அந்த பகுதியை சேர்ந்த மக்களே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியள்ளனர்.
நடேசலிங்கம், பிரியா மற்றும் அவர்களின் இரு பிள்ளைகளே இந்த நிலைமைமையை எதிர்நோக்கியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான அவர்களின் வீசா அனுமதி முடிவடைந்த நிலையில், நாடு கடத்துவதற்காகவே எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை மெல்போர்னுக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இதையடுத்து மேற்கொள்ளபட்ட சட்ட நடவடிக்கைகளுக்கமைய அந்த குடும்பத்தினர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்காக ஏற்றப்பட்டிருந்த விமானத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்கள் நீதிமன்ற விசாரணைகளுக்காக தொடர்ந்தும் மெல்போனில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்களை முன்னர் தங்கியிருந்த பிலோலேக்கு மீண்டும் செல்ல அனுமதிக்குமாறு கோரியே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அவர்களை இலங்கைக்கு நாடு கடத்தக்கூடாது என்றும், குயின்ஸ்லாந்தில் குடியமர்த்துமாறும் கோரியும் பிலோலே மக்களால் சுமார் ஒரு லட்சம் கையொப்பங்களும் பெறப்பட்டுள்ளன.<