Loading...
உள்ளூர் செய்தி:முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தின் குறித்த பொறுப்பதிகாரி, மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
Loading...
நேற்று (7) இரவு கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்தபோது குறித்த அதிகாரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பொறுப்பதிகாரி கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 49 அகவையுடைய வெண்டகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...