மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை எதிர்வரும் 12ம் திகதி வரையில் இவரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலாபம் – புத்தளம் வீதியில் பங்கதெனிய, கொட்டபிட்டிய சந்திப் பிரதேசத்தில் கடந்த 6-ம் திகதி அதிகாலை யசோத ரங்கே பண்டார பயணித்த கெப் வாகனம் வீடொன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதன்போது யசோத ரங்கே பண்டார உள்ளிட்ட நால்வர் காயமடைந்தனர்.
இந்நிலையில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆரச்சிகட்டுவ பொலிஸாரால் யசோத ரங்கே பண்டார ஶ்ரீஜயவர்தபுர வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அதிகாரத்தை பயன்படுத்தி வாகனம் செலுத்தியுள்ளதுடன் சட்டவிரோதமான முறையில் வாள் வைத்திருந்ததாக யசோதர ரங்கே பண்டார மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விபத்தினால் நீர்ப்பாசன அமைச்சுக்கு சொந்தமான வாகனம் மற்றும் அந்த வீட்டுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட யசோதர ரங்கே பண்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.