பிரபல நடிகர்களுக்கு ரசிகர்கள் வட்டாரம் பெரியளவில் இருக்கும். அதே வேளையில் இந்த கூட்டத்தில் அதிதீவிர ரசிகர்களும் இருப்பார்கள். கட்டவுட் என நடிகர்களே வேண்டாம் என சொன்னாலும் ரசிகர்கள் கேட்பதாக இல்லை.
தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் இவ்வருட தொடக்கத்தில் வெளியான படம் அஞ்ஞாதவாசி. இப்படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கியிருந்தார்.
டோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான இவர், சமீபத்தில் ஜனசேனா என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலும் செய்து வருகிறார்.
விசாகப்பட்டினத்தில் உள்ள Payakaraopet டவுனுக்கு நேற்று ஜூன் 7-ஆம் தேதி பவன் கல்யாண் வந்திருக்கிறார். அவரின் வருகைக்காக ரசிகர்கள் டி.நாகராஜு (வயது 28) மற்றும் பி.சிவா (வயது 31) கட்டவுட் வைத்துள்ளனர்.
அப்போது இருவரும் கரன்ட் ஷாக் அடித்து பரிதாபகமாக உயிரிழந்தனர். இது அவர்களின் குடும்பத்தாரிடமும் ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.