கனடாவில் பக்கவாதம் பாதிக்கப்பட்ட மனைவியை கணவர் மருத்துவமனையில் சேர்த்திருந்த நிலையில் அவர் $41,000 பில் கட்ட வேண்டும் என நிர்வாகம் கூறியது கணவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டொரண்டோவை சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் மனைவி ஜியார்ஜினா.
ஜியார்ஜினோவுக்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் அவரை மெக்கன்ஸி ரிச்மண்ட் மருத்துவமனையில் ஜெய்குமார் சேர்த்தார்.
ஜியார்ஜினாவுக்கு குறைந்த செலவில் மருத்துவம் பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாண்டுகள் கழித்து வேறு இடத்தில் நீண்ட கால பராமரிப்பு வசதியில் படுக்கைகள் ஜியார்ஜினாவுக்கு உள்ளது எனவும் அவரை அங்கு அழைத்து செல்லும்படியும் ஜெய்குமாரிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
ஆனால் அங்கெல்லாம் தன்னால் மனைவியை கவனித்து கொள்ள முடியாது என கூறிய ஜெய்குமார் ரிச்மண்ட் மருத்துவமனையிலேயே அவரை வைத்துள்ளார்.
இதையடுத்து ஒருநாளுக்கு $1,200 பில் தொகை என்ற கணக்கில் தற்போது ஜெய்குமார் $41,000 தொகையை செலுத்தவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால் வங்கியில் வரும் மாத வட்டியில் வாழ்ந்து வரும் ஜெய்குமாரால் இந்த தொகையை செலுத்தமுடியாது என்பதால் இது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து பேசிய மருத்துவமனை நிர்வாகி அலிசன் தென்ஹோம், மருத்துவமனையிலிருந்து நோயாளி டிஸ்சார்ஜ் ஆக மறுத்தால் தின வாடகையாக நாங்கள் $1,200 வாங்குவது வழக்கமாகும்.
இது போன்ற விடயம் மிக அபூர்வமாக தான் நடக்கும் என கூறியுள்ளார்.