பிரித்தானிய ரகர் வீரர்கள் ஹெரோயின் போதைப் மாத்திரைகளை உட்கொண்ட காரணத்தினால் உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ரகர் வீரர்களை அழைத்துச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியான ராசீக் மொஹமட் ரியாஸ் என்பவர் இதனைக் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நட்பு ரீதியான ரகர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றிருந்த இரண்டு பிரித்தானிய கழகமட்ட வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
25 வயதான தோமஸ் பெட்டி மற்றும் 26 வயதான தோமஸ் ஹொவார்ட் என்ற இரண்டு வீரர்களே உயிரிழந்திருந்தனர். 17000 ரூபா பெறுமதியான போதைப் பொருளை உட்கொண்ட காரணத்தினால் இவர்கள் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ரகர் வீரர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க முச்சக்கர வண்டி சாரதி போதை பொருள் விற்பனை செய்யும் இடமொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.