பாதாள உலக குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களின் பின்னணியில் சில அரசியல்வாதிகள் மற்றும் உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகள் இருப்பதாக, உயர்கல்வி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தற்போது நாட்டில் பாதாள குழுக்கள் செயற்பாடுகள் போதைப்பொருள்கள் விற்பனையானது அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இவற்றுக்கு சிலரின் உதவி இன்றி இந்த அளவில் இயங்க முடியாது என்றும் கூறினார்.
மேலும், அதனை தடுக்கும் முகமாக இந்த விடயம் தொடர்பில் கடுமையான சட்டங்களை தாமதமின்றி கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் போதைப் பொருள் விற்பனை காரணமாக நாட்டின் இளைஞர்கள் தற்போது அழிவுப் பாதைக்கு செல்வதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.