Loading...
கரந்தெனிய பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் டொனல்ட் சம்பத் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஊரகஸ்மங்சந்திப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உந்துருளியில் பயணித்த இருவர் நேற்றிரவு 10.15 அளவில் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
48 வயதுடைய டொனல்ட் சம்பத் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் கரந்தெனிய பிரதேச சபைக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகிந்த கட்சியின் முக்கியஸ்தராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
Loading...