மெரிக்காவின் பிரபல சமையல் கலைஞர் அந்தோனி போர்டைன் நேற்று தற்கொலை செய்துகொண்டதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஆகியோர் தமது இரங்கலினைத் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் தங்கியிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக பணியாற்றி வந்த போர்டைன் அவர் தங்கியிருந்த அறையில் நேற்று தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவுக்கு சக சமையல் கலைஞர்கள், ஊழியர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு சிறந்த உணவு மற்றும் பானங்கள் குறித்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள அந்தோனி, ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார்.
மேலும் 61 வயதான இவர் சமையல் கலைஞர் மட்டுமின்றி எழுத்தாளர், தொலைக்காட்சிப் பிரபலம் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
அமெரிக்காவின் CNN தொலைக்காட்சியில் “Parts Unknown” சமையல் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ள இவர் இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு விருதும் பெற்றுள்ளார் அவரது மறைவு தங்களுக்கு பேரிழப்பு என CNN தெரிவித்துள்ளது.