இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடுவோம் என்று ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கார் ஸ்டானிக்ஜாய் கூறியுள்ளார்.
வஙக்தேச அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதற்கான அந்தஸ்தைப் பெற்றது.
இதனால் இந்தணி தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கிடையேயான ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி வரும் 14-ஆம் திகதி பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கார் ஸ்டானிக்ஜாய் கூறுகையில், வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்டில் வெற்றி பெற கடினமாக போராடுவோம்.
கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். எங்கள் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி எங்கள் அணியில் தற்போது பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் வீரர்கள் நல்ல பார்மில் உள்ளதால், நிச்சயமாக இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றியுடன் துவங்குவோம்.
மேலும் ரசித் கான் இந்திய மண்ணில் தொடர்ந்து மிரட்டி வருவதால், அதுவும் எங்களுக்கு சாதகம் என்று கூறியுள்ளார்.