10.06.2018 ஞாயிற்றுக்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், வைகாசி மாதம் 27ம் திகதி, ரம்ஜான் 25ம் திகதி, 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை,
ஏகாதசி திதி காலை 8:40 வரை; அதன் பின் துவாதசி திதி, அசுவினி நட்சத்திரம் இரவு 7:58 வரை; அதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அஸ்தம், சித்திரை
பொது : பெருமாள் வழிபாடு
மேஷம்:
சுற்றுப்புற சூழலின் தாக்கம் உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும்.
ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர்.
ரிஷபம்:
மனதில் உருவான திட்டம், செயல் வடிவம் பெறும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். மனைவி கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார்.
மிதுனம்:
தனித்திறமையுடன் செயல்படுவீர்கள். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, எதிரியால் இருந்த தொல்லை குறையும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவி கிடைக்கும்.
கடகம்:
கடந்தகால உழைப்பின் பயன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர் வருகையால் நன்மை காண்பீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும்.
சிம்மம்:
பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவதால் மட்டுமே, எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பணவரவு குறைந்த அளவில் இருக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல்நலம் சீராகும். அரசுவகையில் ஆதாயம் கிடைக்கும்.
கன்னி:
இனிய அணுகுமுறையால் நற்பலன் பெறுவீர்கள். விலகி சென்ற உறவினர், விரும்பி சொந்தம் பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழிக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர்.
துலாம்:
திட்டமிட்ட பணி தாமதமாகலாம். நண்பரின் ஆலோசனை நம்பிக்கைக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத்தன்மை பாதுகாப்பது நல்லது. மிதமான பணவரவு இருக்கும்.வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.
விருச்சிகம்:
மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கருணை மனதுடன் பிறருக்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். புத்திரர் வெகுநாள் விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.
தனுசு:
குடும்பத்தினரின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகலாம். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
மகரம்:
நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர்.
கும்பம்:
மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழித்து ஆதாய பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி பற்றிய பேச்சு நடக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.
மீனம்:
சூழ்நிலை அறிந்து சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும். பணியாளர்கள் நிலுவைப் பணியை முடிக்க விரைந்து செயல்படுவர். பிள்ளைகள் வழியில் சுபச்செலவு உண்டாகும். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.