பிரித்தானியாவில் தனது பாடசாலை காலகட்டத்தில் மிக மோசமாக கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானேன் என தமிழ் பெண் ஒருவர் தமது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்குவார்கள், ஆனால் பாடசாலைகளில் அதுபோன்று நடக்குமா என்ற கேள்வி முதன் முறையாக எழுந்தது எனக்கூறும் அவர், அப்போது பாடசாலைக்கு செல்லும் காலகட்டத்தில் தாம் நெற்றியில் கறுப்பு பொட்டு வைத்து, எண்ணெய் வடியும் முகத்துடன், தலைக்கு அதிக எண்ணெய் வைத்து நாள் தோறும் சென்று வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இவை அனைத்தும் ஒரு கட்டத்தில் மாறும் என்பது பின்னாளில் தாம் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானது வரை நினைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது பாடசாலை தோழிகள் இருவர் ஒருநாள் தம் எதிர் திசையில் இருந்துகொண்டு தம்மை பார்த்தவாறே தங்களுக்குள் கேலி பேசி சிரித்தனர்.
ஏன் அவர்கள் கேலி பேசுகிறார்கள் என முதலில் புரியவில்லை என கூறும் அவர், பின்னர்தான் அவர்கள் எனது கால்களில் அடர்த்தியாக வளர்த்திருக்கும் முடி கண்டு கேலி செய்கிறார்கள் என புரிந்தது என்றார்.
இது மட்டுமின்றி மிக மோசமாக தன்னைப்பற்றி அவர்கள் பேசியது தனக்கு புரியவில்லை எனக் கூறும் அவர்,
அதுவரை மிக அழகானவளாக கருதியிருந்த தாம், அதன் பின்னர் தம்மிடம் ஏதோ குறை இருக்கிறது என்ற எண்ணம் தன்னை துன்புறுத்தியது என்றார்.
இந்த விவகாரத்தை வீட்டில் இருப்பவர்களிடமும் விவாதிக்க முடியாமல், மிகவும் துயரப்பட்டதாக கூறும் அவர், இலங்கையில் பெண்கள் மற்றும் வயதுக்கு வந்த அனைவருக்கும் கால்களில் அடர்த்தியாக முடி வளர்ந்திருக்கும்.
ஆனால் அதை எவரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை, சக மாணவிகளின் கேலியும் கிண்டலும் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், ஒருநாள் தமது தோழியை அழைத்துக் கொண்டு புகார் அளித்ததாக கூறினார்,
அதன் பின்னர் ஒருநாள் ஏன் அவர்கள் தம்மை கிண்டல் பேசினார்கள் என்பதை யோசித்தேன், அவர்களாக நான் இல்லை, நானாகவே இருப்பதால்தான் என்ன அவர்கள் கிண்டல் பேசுகிறார்கள் என்பது புரிந்தது என்றார்.
நாளடைவில் தாமும் அவர்கள் போன்று மாற வேண்டும், கால்களில் அடர்த்தியாக வளர்ந்த முடியை நீக்க வேண்டும் என முடிவுக்கு வந்ததாகவும், தற்போது 28 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்களாகவே தாம் மாறிவிட்டதாகவும், பொட்டு வைத்துக் கொள்வதில்லை, எண்ணெய் வழியும் முகமில்லை, பிரித்தானியாவில் பிறந்தவளாகவே மாறிவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பாரம்பரிய உடை அணிந்து பணிக்கு சென்றால் அவர்கள் விரும்புவதில்லை, அதனால் அவர்களுக்காக தியாகம் செய்ய கற்றுக் கொண்டேன், இருப்பினும் பாரம்பரிய இலங்கை உணவு வகைகளை மட்டுமே தினந்தோறும் சாப்பிட்டு வருகிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உலகத்திலேயே கொடுமையானது ஒரு இனத்தின் அல்லது ஒரு நபரின் அடையாளத்தை இழப்பதுதான் அந்த வகையில் குறித்த பெண் தன் அடையாளத்தை இறுதிக்காலத்தில் மறைத்து அல்லது மாற்றியுள்ளமையால் அவர் எத்தகைய துன்பங்களை அனுபவித்திருப்பார் என்பதை எங்களால் உணர முடிகின்றது என சமூக வாசிகள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.